அண்ணா பல்கலை மண்டல தடகளம் ராஜராஜன் பொறியியல் கல்லூரிக்கு கோப்பை

காரைக்குடி, அக். 23: அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகள போட்டியில்  ராஜராஜன் பொறியியல் கல்லூரி 15 பதக்கங்களை பெற்று ரன்னர் கோப்பையை பெற்றுள்ளது. மதுரையில் அண்ணா பல்கலைக்கழக அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடந்தது. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இதில் காரைக்குடி அருகே அமராவதி புதூர் ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அணி 10 ஆயிரம் ஓட்டப்பந்தயத்தில் முதலாவது இடம், 110 மீட்டர் தடைதாண்டு போட்டியில் முதலாவது இடம், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடம், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது- மூன்றாவது இடங்கள், 20 கி.மீ நடைபோட்டியில் இரண்டாவது இடம், தொடர் ஒட்டத்தில் இரண்டாவது இடம், ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று பதக்கம் வென்றனர். மாணவிகள் அணி 1000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது இடம், 5 கிலோ மீட்டர் நடை போட்டியில் முதலாவது இடம், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாவது இடம், 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாவது இடம், தொடர் ஓட்ட பந்தயத்தில் மூன்றாவது இடம் பெற்று பதக்கம் பெற்றுள்ளனர். தடகள போட்டிகளின் ஒட்டுமொத்த ரன்னர் கோப்பை வென்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை முதல்வர் மயில்வாகனன், உடற்கல்வி இயக்குநர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: