பெரியார் பல்கலையில் நாளை 19வது பட்டமளிப்பு விழா

ஓமலூர், அக்.23: பெரியார் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா நாளை(வியாழக்கிழமை) 12 மணியளவில் பெரியார் கலையரங்கில் நடக்கிறது. இதுகுறித்து, பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது. பெரியார் பல்கலைக்கழகத்தின் 19-வதுபட்டமளிப்பு விழா பெரியார்கலையரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், பெரியார்பல்கலைக்கழகவேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான பன்வாரிலால்புரோகித் கலந்து கொண்டு முனைவர்பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 261 மாணவர்களுக்கும்,  பெரியார் பல்கலைக்கழகத்துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலைப்பாடங்களில் முதலிடம் பிடித்த 95 மாணவர்களுக்கும் தங்கப்பதக்கத்துடன் பட்டச்சான்றிதழை வழங்குகிறார். பெரியார் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, டி.எஸ்.சிஎனப்படும் முதுமுனைவர் பட்டச்சான்றிதழையும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் வழங்குகிறார். வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில், பெரியார்பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான சதாசிவம் பட்டமளிப்பு விழாஉரை நிகழ்த்துகிறார். சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிருக்கும் இணைவுபெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 44,497 மாணாக்கர்களும், பெரியார் பல்கலைக்கழகத்துறைகளில் பயின்ற 1,099 மாணவர்கள், என மொத்தம் 55,784 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர். இவ்வாறு பல்கலை துணை வேந்தர் குழந்தை வேல் தெரிவித்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் குழந்தைவேல் தலைமையில் பதிவாளர்(பொ)தங்கவேல், தேர்வாணையர் (பொ) முத்துசாமி மற்றும் பேராசிரியர்கள், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>