ஒரத்தநாட்டில் நீதிபதி குடியிருப்பு பகுதி சாலையில் கழிவுகளை கொட்டும் அவலம் துர்நாற்றத்தால் அவதி

ஒரத்தநாடு, அக்.23: ஒரத்தநாட்டில் நீதிபதி குடியிருப்பு அமைந்துள்ள பிரதான சாலையில் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றத்தால் வீசுவதை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான நீதிபதி குடியிருப்பு மற்றும் அரசு நூலகம், ஒரத்தநாடு எம்எல்ஏ அலுவலகம், அரசு போக்குவரத்து பனிமனை ஆகியவைகள் அமைந்திருக்கும் முக்கிய பகுதியான முக்கிய சாலையான பைபாஸ் சாலையில், ஹோட்டல் கழிவுகளையும், பழைய மரம் ஓடுகளையும் பொதுபணித்துறைக்கு சொந்தமான இடங்களில், தனியார் நிறுவனங்கள் தினசரி கொட்டி வருவதால், அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையான அஞசல்துறை அலுவலகம் அமைந்துள்ள கோமுட்டி தெரு, வங்கிகள் மற்றும் முக்கிய பகுதியான ராயர்தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி, சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அண்ணாசிலை பகுதி ஆகியவை பேரூராட்சி நிர்வாகத்தால் கண்காணிக்கப்படாமல், துர்நாற்றம் வீசும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.இச்சம்பவத்தால் ஒரத்தநாடு நகரிலிருந்து பலர் காய்ச்சல் மற்றும் தொற்றுவியாதியால் பாதிக்கப்பட்டு, தஞ்சை தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேற்கண்ட பகுதிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: