கந்தர்வகோட்டை வட்டாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்

வழங்கல்

கந்தர்வகோட்டை, அக்.23: மழை காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பல இடங்களில் பரவி வருகிறது. எனவே கந்தர்வகோட்டை பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கு அறந்தாங்கி சுகாதார மாவட்டம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொது இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் டெங்கு காய்ச்சலுக்கு உற்பத்தி காரணிகள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக கந்தர்வகோட்டை வட்டாரத்தில் உள்ள 88 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவர் விண்ணரசி தலைமையில் பள்ளி தலைமையாசிரியை ராமஜெயம் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் அலெக்சாண்டர் அறிவுரைப்படி 88 பள்ளிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: