காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடத்தை தாசில்தார் தலைமையில் அளவீடு

வேலூர், அக்.23: காட்பாடி காங்கேயநல்லூரில் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடத்தை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் அளவீடு செய்தனர். காட்பாடி காங்கேயநல்லூரில் கூட்டுறவு நகரமைப்புக்கு சொந்தமான 92 சென்ட் காலியிடம் உள்ளது. இந்த இடத்தின் அருகில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலை பல ஆண்டுகளுக்கு முன் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். இங்கு கடந்த ஜூலை மாதம் கூட்டுறவு சங்கத்தினர் முள்கம்பியால் வேலி போட கற்கள் நட்டனர். அப்போது கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கும், கோயில் நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட தகராறில் வேலி அமைப்பது தடைபட்டது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை காட்பாடி தாசில்தார் மற்றும் போலீசார் அளந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அதன்படி நேற்று காட்பாடி தாசில்தார் பாலமுருகன் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய்த்துறையினர் அளந்தனர். அளவீடுகள் முடிந்தவுடன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: