தீபாவளியை உற்சாகமாக கொண்டாட வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபர் கைது கையும் களவுமாக அகப்பட்டார்

கந்தர்வகோட்டை, அக்.18: கந்தர்வகோட்டை அருகே மஞ்சம்பட்டியில் தனது வீட்டில் சாராயம் காய்ச்சிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் புத்தாடைகள், பட்டாசுகள், நகைகள் உட்பட பலப்பொருட்களை வாங்க ஆசைப்பட்டு வாங்குவார்கள். இளைஞர்கள், வாலிபர்கள், முதியவர்கள் என பலதரப்பட்டவர்களில் சிலர் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட டாஸ்மாக் கடைகளை நாடுவார்கள்.

தற்போது டாஸ்மாக்கில் தேவையான சரக்கை கொடுக்காமாலும், டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை செய்யப்படுவதாலும் மாரிமுத்து தனது வீட்டில் ஊறல் வைத்து சாராயம் காய்ச்ச துவங்கினார். இதுகுறித்து வந்த ரகசிய தகவலின்பேரில் எஸ்ஐ.சுந்தரமூர்த்தி, தனிபிரிவு தலைமை காவலர் பன்னீர்செல்வம், போலீசார் கமலஹாசன் ஆகியோர் சென்று மாரிமுத்துவை மடக்கி பிடித்தனர். தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட நினைத்த மாரிமுத்து தற்போது நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: