வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

சூலூர், அக்.18:  சூலூர் அருகே உள்ள ராசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்  இவரது மகன் கண்மணி (29). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நரசிம்மநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்த தீபராணி (21) என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது  இவர்களுக்கு ஒரு  வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார். அவர் வரவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை ராசிபாளையத்தில் உள்ள தனது நண்பர் கனகராஜ் வீட்டிற்கு  சென்ற கண்மணி அங்குள் பாத்ரூமில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது  பாக்கெட்டில் இருந்த கடிதத்தில் தன்னுடைய  தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும், மனைவி வாழ வராததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துள்ளார். சூலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: