டெங்கு விழிப்புணர்வு பேரணி

விருத்தாசலம், அக். 17: விருத்தாசலத்தில் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் செல்வகுமார், பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கடலூர் ரோடு, கடைவீதி, தென்கோட்டை வீதி, பாலக்கரை வழியாக சென்ற பேரணியில் டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு கோஷங்களை மாணவர்கள் எழுப்பி சென்றனர். விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரணி முடிவுற்றது. இதில் சார் ஆட்சியர் பிரவீன்குமார் டெங்கு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கினார்.

Related Stories: