காரைக்குடி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

காரைக்குடி, அக். 16:  காரைக்குடியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான குளங்கள், கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. அதே நேரங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் கழிவுநீர் வாய்க்கால்கள் அனைத்திலும் கொசு உற்பத்தியும் அதிகமாகி மாலை நேரங்களில் கொசுக்கள் வீட்டிற்குள் புகுந்து கடிக்க தொடங்குகிறது. இதனால் சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். தொண்டை வலி, கண் எரிச்சல், கை, கால் வலி, உடல் வலி, குமட்டல், உடல் சோர்வு போன்ற அனைத்து நோய்களும் ஒரே நேரத்தில் வருகிறது. இதற்கு அரசு மருத்துவமனைகளில் வைரஸ் காய்ச்சல் என்கின்றனர். காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் இதேபோன்று ஏராளமான நோயாளிகள் தினமும் வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காரைக்குடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்காமல் பார்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: