அரசு பள்ளிகளில் உலக கை கழுவும் தினம் கொண்டாட்டம்

முத்துப்பேட்டை, அக்.16: முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது.உலக சுகாதார நிறுவனம் நோய்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக 1965ம் ஆண்டு முதல் அக்டோபர்15ம் தேதியை உலக கைகழுவும் தினமாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி உலக கை கழுவும் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தார். இதில் முத்துப்பேட்டை சுகாதாரத்துறை அலுவலர் நாகராஜ் மாணவர்கள் சுகாதாரத்தை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

தொடர்ந்து மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய பகுதிகளில் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக கை கழுவும் தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை குணசுந்தரி தலைமை வகித்தார். கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக கைகழுவும் தினம் ஆசிரியை பொற்செல்வி தலைமையிலும் தலைமை ஆசிரியர்முருகேசன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் தினந்தோறும் நாம் எவ்வாறு கைகளைக் கழுவி சுத்தத்தைப் பேண வேண்டும் என செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டி வட்டாரக் கல்வி அலுவலர் முத்தமிழன் கைகழுவும் அவசியம் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் வட்டார ஆசிரியர் பயிற்றுநர் காளிதாஸ், தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் உமாராணி வரவேற்றார்.ஆசிரியை அன்புச்செல்வி நன்றி கூறினார்.

Related Stories: