5 பேர் படுகாயம் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி மாணவர்கள் உருவாக்கிய 12 அடி உயர ராக்கெட் கண்காட்சியில் இடம்பெற்றது

பொன்னமராவதி, அக்.16: பொன்னமராவதியில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சமூக சேவைக்கான உயிர் காக்க உதவும் வீரப் பெண்கள் என்ற விருது வழங்கப்பட்டது பொன்னமராவதி காமராஜ் நகரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் எழுச்சி மன்ற சார்பில் பொன்னமராவதி சக்தி மாதர் குழுவிற்கு உயிர் காக்க உதவும் வீரப் பெண்கள் என்ற விருது வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் அப்துல் கலாம் பிறந்த நாளில் சமுக ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு சமீபத்தில் நடைபெற்ற ஒரு இரத்த தான முகாமில் தானாக முன்வந்து ரத்த தானம் செய்து பெண்களால் உலகை ஆளும் திறன் மட்டுமல்ல உயிர் காக்க உதவும் திறன் கொண்டவர்கள் என்று நிரூபித்து இரத்த தானம் செய்து பலர் உயிர் காக்க உதவிய பொன்னமராவதி சக்தி மாதர் குழுவை பாராட்டும் விதமாக டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளில் லயனஸ் சங்க நிர்வாகிகள் குமரப்பன், மாணிக்கவேல் ஆகியோர் உயிர் காக்க உதவும் வீரப்பெண்கள் என்ற விருதை சக்தி மாதர் குழு தலைவி புவனேஸ்வரி, ரேவதி, பொன்னரசி மற்றும் டாக்டர் அப்துல் கலாம் எழுச்சி மன்ற செயல் ஆலோசகர் பாஸ்கர் இந்தியன் மணிகண்டன் இணைந்து வழங்கினர்.

Related Stories: