சேவல் சூதாட்டம் 8 பேர் கைது

கோவை, அக் 15: நெகமம் அருகே உள்ள கானியாளம்பாளைம் வாய்க்கால்மேடு பகுதியில் சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் நெகமம் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சேவல்  வைத்து சூதாடிய மணிகண்டன் (32), தனசேகரன் (32),   நவீன்குமார் (24), முருகன் (22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல், 550 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.   சூலூரில் உள்ள ஒரு மில்லுக்கு பின்புறம் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மனோஜ்குமார் (18), நித்யானந்தம் (37), மனோஜ் (23) வெங்கடேஷ் (30) ஆகியோரை சூலூர் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 சேவல், 300 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: