கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்

காஞ்சிபுரம், அக். 15: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை,  வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை,  குடும்ப அட்டை,  பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறணாளிகளுக்கான உதவித்தொகை. இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய 400 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை வழங்கினார்.

மேலும், இக்கூட்டத்தில் சமூக  பாதுகாப்புத்  திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை வழங்குவதற்கு உண்டான ஆணையை 7 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும், 2018ம் ஆண்டு கொடி நாள் நிதி வசூலாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் 2 லட்சத்து 5 ஆயிரம், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் 1 லட்சத்து 9 ஆயிரத்து 950, கலால் உதவி ஆணையர் 2 லட்சத்து 35 ஆயிரம், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் 70 ஆயிரம், மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் 50 ஆயிரம், செங்கல்பட்டு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் 40 ஆயிரம், காஞ்சிபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் 34 ஆயிரத்து 900, காஞ்சிபுரம் வட்டாட்சியர் 28 ஆயிரம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் 10 ஆயிரம். செங்கல்பட்டு வட்டாட்சியர் 18 ஆயிரத்து 100, மதுராந்தகம் வட்டாட்சியர் 70 ஆயிரம், டாஸ்மாக் பொது மேலாளர் 10 ஆயிரம் என மொத்தம் ₹8 லட்சத்து 80 ஆயிரத்து 950 கொடிநாள் நிதியாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மாலதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி, கலால் உதவி ஆணையர் ஜீவா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தங்கவேலு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் தனலட்சுமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: