சோமனூர் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

சோமனூர், அக்.10:சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. விஜயதசமியையொட்டி சோமனூரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நவராத்திரி கொலு பொம்மைக்கு தினசரி பூஜை நடந்தது. இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முளைப்பாரி, சப்பரம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கிருஷ்ணாபுரம் சித்தி விநாயகர் கோயிலில் இருந்து சோமனூர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் ஆகியவை கொண்டு வந்தனர். தொடர்ந்து சவுடேஸ்வரி அம்மனுக்கு 108 வகையான சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories: