அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சத்தியமங்கலம், அக். 10:   சத்தியமங்கலம் நிர்மலா தியேட்டர் சாலையில் உள்ள  அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் 42ம் ஆண்டு நவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. நவராத்திரி விழா துவங்கி அஷ்டலட்சுமி பூஜை, லலிதாம்பிகை ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. கோயிலில் கொலு வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து வரசித்தி விநாயகர் கோயில் அருகே பவானி ஆற்று படித்துறையில் நடந்த தீர்த்தவாரி நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இதைத்தொடாந்து வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றடைந்தனர். இந்த விழாவில் வாணிய செட்டியார் சங்க தலைவர் கோபு, செயலாளர் பாபு, பொருளாளர் பாலசுப்ரமணியம், சரவணக்குமார், தானப்ப செட்டியார், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நவராத்திரி விழா நிறைவு நாளில் கோயில் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கோயிலில் வைக்கப்பட்ட கொலுவில் அத்திவரதர் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் வைத்து பூஜிக்கப்பட்டது.

Related Stories: