குருவிகுளத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

கோவில்பட்டி, அக். 10: கோவில்பட்டி அருகே குருவிகுளம் வளனார் ஐடிஐ நிறுவனத்தில் இன்று (10ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கோவில்பட்டி அருகே குருவிகுளம் வளனார் ஐடிஐ நிறுவனம் மற்றும் டிவிஎஸ் குழுமம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம், இன்று (10ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. குருவிகுளம் வளனார் ஐடிஐ நிறுவனத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் டிப்ளமோ, ஐடிஐ படித்து முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமிற்கான ஏற்பாடுகளை குருவிகுளம் வளனார் ஐடிஐ நிறுவன நிர்வாகி ஜெயபாலன் வழிகாட்டுதலின்படி ஐடிஐ முதல்வர் பாலமுருகன் செய்துள்ளார்.
Advertising
Advertising

Related Stories: