பரவும் மர்ம காய்ச்சல்

மணமேல்குடி, அக்.10: மணமேல்குடியை அடுத்த அம்மாபட்டினத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வடக்குத் தெருவில் உள்ள குடியிருப்புகளில் சாக்கடை நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற முடியாத நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது. இந்த சாக்கடை கால்வாய் ஓரத்தில் வசிக்கக் கூடிய பெரும்பாலான மக்கள் மர்ம காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இந்த மர்மக் காய்ச்சலால் பலர் தனியார் மருத்துவமனையை நாடிச்செல்கின்றனர். இந்த மர்மக் காய்ச்சலால் ரத்த அணுக்கள் குறைவு மற்றும் உடல் பலவீனம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மணமேல்குடி பகுதியில் பரவும் மர்ம காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: