வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர், அக். 1: சாலையோர வியாபாரிகள், தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி கடலூர் நகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த வேண்டும் மற்றும் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்.தேர்தல் மூலம் வெற்றி பெற்ற நகர வணிக குழு உறுப்பினர்களுக்கு கடலூர் நகராட்சியில் அலுவலக வசதியும், பணியாளர்கள் நியமனம் செய்து கொடுக்கவேண்டும்.கடலூர் பெருநகராட்சி, குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வணிக குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று காலை கடலூர் பெரு நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். வணிக குழு உறுப்பினர்கள் நாகராஜ், இந்திரா, பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாவட்ட தலைவர் துரை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் மாவட்ட பொதுச்செயலாளர் குளோப் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், செல்வம், பாக்கியம், மணிகண்டன், கொளஞ்சி, ரஜினி, வெங்கட், சங்கர் உட்பட பலர் பேசினர். உதயா நன்றி கூறினார்.

Related Stories: