சிங்கம்புணரியில் கடலை அறுவடை பணிகள் மும்முரம்

சிங்கம்புணரி, அக்.1:  சிங்கம்புணரியில் கடலை அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.  சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில்  கடலை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆடி முதல் வாரத்தில் கடலை விதைப்பு செய்யப்பட்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அறுவடை சீசன் தொடங்கும். இந்நிலையில் கடந்த சில வாரமாக  இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாயிருப்பு, கீழ வண்ணாயிருப்பு, உரத்துப்பட்டி, மின்ன மலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடலை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மழை பெய்துள்ளதால் கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: