நாமக்கல் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

நாமக்கல், அக்.1: நாமக்கல் நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். நாமக்கல் நகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் நகராட்சி, என்.கொசவம்பட்டி, செட்டியார் தெரு மேற்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் இருக்கிறதா? என்றும், முறையாக மூடப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டார். மேலும், டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, அவை உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களிடம் எடுத்து கூறினார். இந்த ஆய்வின்போது, நகராட்சி ஆணையாளர் சுதா, சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: