நாகை மாவட்டத்தில்

நாகை, அக்.1: நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 2 நாட்கள் நடத்திய ஒருங்கிணைந்த சோதனையில் 73 நபர்கள் மீது மது குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.நாகை எஸ்பி ராஜசேகரன் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் 28, 29 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் ஒன்றாக இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது 35 வழக்குகள், மது குற்ற செயல்களில் ஈடுபட்ட 73 நபர்கள் மீது மது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 45 நபர்கள் மீது மதுஅருந்தி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 1546 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 10 பிடிக்கட்டளைகள் நிறைவேற்றப்பட்டு மணல் திருட்டு, கஞ்சா வழக்கு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டது.

Related Stories: