கடலூர் மாவட்டத்தில் வட மாநிலத்தவர் விவரங்கள் சேகரிப்பு

கடலூர்,  செப். 25: கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அதிக அளவில் வட மாநிலத்தவர்  ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இதுபோல் கட்டுமான  பணிகளிலும், கேபிள் புதைவட கம்பி அமைக்கும் பணிகளிலும் வேலை  செய்கின்றனர். ஓட்டல்களிலும் சர்வேயர்களாக உள்ளனர். இந்நிலையில்   சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் வீட்டில் நகை மற்றும்  பணம் திருடியதாக 6 வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் போலீசாரால் கைது  செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் வடமாநில இளைஞர்கள் சிலர்   கொலை,கொள்ளை, திருட்டு, போதை பொருட்கள் விற்பனை, வழிப்பறி போன்ற சட்டவிரோத  செயல்களில்  ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அதனை அடுத்து தமிழகம் முழுவதும்  வசிக்கக்கூடிய வட மாநிலம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின்   விவரங்களை சேகரிக்க காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.  அதன்  அடிப்படையில்  கடலூர் மாவட்டத்தில், உளவுத்துறை, கியூ பிராஞ்ச் போலீசார்   வட மாநிலத்தவரை  தீவிரமாக கண்காணித்து

தகவல்களை சேகரித்து  வருகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வசித்து வருகின்றனர்.  கடைகளில் பல்வேறு இடங்களில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர் என்பது  குறித்த  தகவல்களை சேகரித்து வருகின்றனர். மேலும் அவர்களது சொந்த ஊர், விலாசம்,  அவர்களது புகைப்படம், யாருடன் வசிக்கிறார்கள்? யார் மூலமாக கடலூர்  மாவட்டத்திற்கு வந்தனர்? உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Related Stories: