கரூர் ஆத்தூர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் தீத்தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

கரூர், செப். 25: கரூர் ஆத்தூரில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் விதிகளின்படி பேரிடர் தொழிற்சாலைகளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை அவசர நேரத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி கரூர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நடத்தப்பட்டது. ஒத்திகையில் தொழிற்சாலை தொழிலாளர்கள், தீயணைப்புக்குழு, தீயணைப்பு உதவிக்குழு மற்றும் மருத்துவ பாதுகாப்பு குழு என 3 குழுக்களாக பிரிந்து, தமிழ்நாடு தீயணைப்பு நிலைய வண்டிகள் மூலம் தீ அணைக்கப்பட்டது.இதில் டிஎன்பிஎல், இஐடி பாரி ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து மியூச்சுவல் எய்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் மாலதி தலைமை வகித்து பயிற்சி ஒத்திகை பற்றி ஆலோசனைகள் வழங்கினார்.

Related Stories: