பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

பண்ருட்டி, செப். 24: பண்ருட்டி- கடலூர் மெயின்ரோட்டில் பேருந்து நிலையம் அருகில் தனியார் வங்கிகள், மருந்தகங்கள், ஸ்வீட் ஸ்டால்கள், பங்க் கடைகள் தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இதன் அருகில் உள்ள சாலையில் மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். கடந்த ஒரு வருட காலமாக இப்பகுதியில் ஏராளமான பைக்குகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் ஏராளமான விபத்துகளும் நடந்து வருகின்றன. கடந்த ஒரு வாரகாலமாக பெய்த மழையால் இப்பகுதியில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. சாலை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள இந்த இருசக்கர வாகனங்களை டிராபிக் போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால் இந்த சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல முடியாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் சைக்கிள்களிலும், நடந்தும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வாகனங்களை முற்றிலும் அகற்றினால் போக்குவரத்து நெரிசல் இன்றி பொதுமக்கள், வாகனங்கள் சென்று வரமுடியும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: