கரூர் நகர பகுதியில் அதிவேகத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால் பொதுமக்கள் அச்சம், பீதி

கரூர், செப். 20: கரூர் நகரப்பகுதிகளில் மற்ற வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கும் வகையில் அதிக வேகத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் நகராட்சியில் கோவை ரோடு, தெற்கு மற்றும் வடக்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், செங்குந்தபுரம் மற்றும் காமராஜபுரம் பகுதி ஆகிய சாலைப்பகுதிகள் அதிக வாகன போக்குவரத்து நிறைந்த சாலைகள்.இந்த சாலைகளில் சில இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்ற வாகன ஓட்டிகளையும், நடந்த செல்பவர்களையும் பீதிக்குள்ளாக்கும் வகையில், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனுடன், அதிக வேகமாக செல்வதால் பல்வேறு தரப்பினர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிமிட நேரத்தில் அதிக வேகத்துடன் கடந்து செல்லும் இந்த செயலால், இதனால், அவதிக்குள்ளாகி வருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலையில், நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையும் தாண்டி வேகமாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில்தான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நகராட்சி பகுதிச் சாலைகளில் பைபாஸ் சாலைகளில் செல்வது போல சென்று வருபவர்களை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: