அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து மாதம் கடைபிடிப்பு

காரைக்குடி, செப். 19: காரைக்குடி அருகே அங்கன்வாடி பாணியாளர்கள் போஷன் அபியான் திட்டம் கடைபிடித்தினர்.இந்த மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் உள்ள நாடாக இந்தியா உருவாக வேண்டும், அதற்காக அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினமும் ஏதாவது ஒரு செயல்பாடுகள் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் கர்ப்பிணிகள், குழந்தைகள் வளர் இளம் பெண்கள் ஆகியோர் பயனாளிகள் ஆவர்.அவர்களது உடல் எடை, வளர்ச்சி பரிசோதிக்கப்பட்டு, உடல் எடை குறைவாக இருந்தாலோ, வளர்ச்சி குறைவாக இருந்தாலோ, ரத்த அளவு குறைவாக இருந்தாலோ அதற்கு தகுந்த ஆலோசனை வழங்கி, எந்தெந்த உணவுப்பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று எடுத்துக்கூற வேண்டும். மேலும் அப்பொருட்களால் ஏற்படும் நன்மைகள், நோய் எதிர்ப்பு சக்திகள் குறித்து எடுத்துக்கூறி உண்ண செய்கின்றனர்.கர்ப்பிணிகள் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், இறைச்சி பால், மீன், முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்தவுடன் சீம்பால் வழங்க வேண்டும், ஆறு மாதம் வரை தாய்ப்பால், மட்டுமே குழந்தைக்கு போதுமானது, அதன் பிறகு தாய்ப்பாலுடன் கொஞ்சம் திரவநிலை (ஊட்டச்சத்து மாவு) வழங்க வேண்டும்.

ஒருவயது ஆனவுடன் திரவ, திட உணவுகளை குழந்தைக்கு வழங்க வேண்டும். பிறகு குழந்தை பராமரிப்பு மற்றும் அதன் வளர்ச்சி செயல்பாடுகளை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை எவ்வாறு உள்ளது என்று கண்டறிந்து, குறைவாக இருந்தால் ஆலோசனை வழங்க வேண்டும்.இதுது குறித்து அங்கன்வாடி பணியாளர் ஒருவர் கூறியதாவது: வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலை கண்டறிந்து அதற்கு தகுந்த மாதிரி உணவு வகைகளை உட்கொள்ள செய்ய வேண்டும், வளர் இளம் பெண்களுக்கு தன் சுத்தம் சுகாதாரக் கல்வி வழங்க வேண்டும், எட்டாம், பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத பெண்களுக்கு அரசு இலவச தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

மேலும் சிறுவர் சிறுமியர்களுக்கு தன் சுத்தம் கல்வி புகட்டுதல், எந்தெந்த உணவுப் பொருட்களை உண்ண வேண்டும், எந்தெந்த தின்பண்டங்களை உண்ணக்கூடாது என்று எடுத்துச் சொல்லகின்றனர். இதன்மூலம் குழந்தைகள் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடையும், நம்நாடு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இல்லாத நாடாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தி போஷன் அபியான் திட்டத்தை அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். இவ்வாறு கூறினார்.

Related Stories: