ஒரத்தூர் அருகே மின்கம்பிகளில் சிக்கியுள்ள மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

சேத்தியாத்தோப்பு, செப். 19: ஒரத்தூர் அருகே சாலையோரத்தில் உள்ள மின் கம்பிகளில் சிக்கியுள்ள மரக்கிளைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேத்தியாத்தோப்பு-சிதம்பரம் சாலையில் ஒரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். தனியார் வங்கிகளும், அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியும், காவல் நிலையமும் உள்ளன. மேலும் இந்த சாலையில் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

தினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், கார்களும், இரு சக்கர வாகனங்களும் செல்லும் சாலையாகவும் உள்ளது. இந்நிலையில், ஒரத்தூரில் அமைந்துள்ள காதித்துறை கட்டிடத்தின் அருகே சாலையோரத்தில் உள்ள மின்சார கம்பிகளின் மேல் தற்போது மரக்கிளைகள் சிக்கி செல்கிறது. தற்போது காற்றும் வீசி, மழையும் பெய்து வருவதாலும், இச்சாலையின் வழியே செல்லும் மாணவ, மாணவிகளும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். எனவே, மின்கம்பிகளின் மேல் செல்லும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: