விராலிமலை, செப்.15: தொகுதியில் திமுக இளைஞர் அணி சேர்க்கை முகாம் நடைபெற்றது. விராலிமலை செக்போஸ்ட் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த முகாமிற்கு மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் மணி, அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தென்னலூர் பழனியப்பன். விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன், விராலிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் இளஞ்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர்அணி துணை செயலாளர் பாலசந்தர் வரவேற்றார்.