கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர், செப்.11: அலங்காநல்லூர் அருகே ஆதனூரில் காளியம்மன், கருப்பசாமி, மாடசாமி, நாகம்மாள், மகா கணபதி, கந்தன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல் நாள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. மறுநாள் மஹாகணபதி ஹோமத்துடன் இரண்டாம் கால பூஜை நடந்தது. இதில் மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து அழகர்மலை, காவேரி, கங்கை, காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தல தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: