கந்து வட்டி கேட்டு மிரட்டல் தொழிலாளி கலெக்டரிடம் புகார்

ஈரோடு, செப். 11:   கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுவதாக நெசவுத்தொழிலாளி நேற்று கலெக்டரிடம் புகார் அளித்தார். வெள்ளோடு சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் சென்னிமலையில் உள்ள காளிகோப் டெக்ஸ் கூட்டுறவு சங்கத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னிமலையில் உள்ள ஒரு பைனான்சில் குடும்ப தேவைக்காக ரூ.70 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் அதே பைனாஸ்சில் ரூ.45 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கியதற்கு ஆதரமாக தனது வங்கி கணக்கு காசோலைகளை சுப்பிரமணியம் வழங்கினார். சில மாதங்கள் கடன் தொகையை கட்டி வந்த சுப்பிரமணியத்தினால் தொடர்ந்து திருப்பி செலுத்த முடியவில்லை.

Advertising
Advertising

இந்நிலையில் கடன், வட்டி, வட்டிக்கு வட்டி என மொத்தம் ரூ.15 லட்சத்தை செலுத்த வேண்டும் என பைனான்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம், கடன் வாங்கிய மொத்த தொகை ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்திற்கு ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியிருப்பது குறித்து பைனான்ஸ் நிறுவனத்திடம் கேள்வி கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காவிட்டால் வீட்டை பூட்டி விடுவோம் என தொடர்ந்து பைனான்ஸ் நிறுவனம் மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் நேற்று முன்தினம் நெசவுத்தொழிலாளி சுப்பிரமணியம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: