குடியாத்தம் கோர்ட் தீர்ப்புசெக் மோசடி செய்தவருக்கு 2 ஆண்டு சிறை

குடியாத்தம், செப்.11: செக் மோசடி செய்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குடியாத்தம் கோர்ட் தீர்ப்பளித்தது.குடியாத்தம் அடுத்த குட்டவாரிபள்ளி பஜனை கோயில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார்(34). வேலூர் அல்லாபுரம் குமாரசாமி முதல் ெதருவை சேர்ந்தவர் சக்திவேல்(42). இருவரும் நண்பர்கள். இந்நிலையில், சக்திவேல் கடந்த 2011ம் ஆண்டு சொந்த செலவுக்காக மகேஷ்குமாரிடம் இருந்து வட்டிக்கு ₹1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர், சக்திவேல் கடனை திருப்பி தருவதற்காக ₹1 லட்சத்திற்கான வங்கி காசோலையை மகேஷ்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது சக்திவேல் கணக்கில் பணம் இல்லாததால் ‘செக் பவுன்ஸ்’ ஆனது. இதையடுத்து மகேஷ்குமார் குடியாத்தம் கோர்ட்டில் கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

Advertising
Advertising

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி செல்லபாண்டியன், செக் மோசடி செய்த சக்திவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், மகேஷ்குமாருக்கு ₹1.20 லட்சத்தை சக்திவேல் திருப்பி தரவும் உத்தரவிட்டார்.

Related Stories: