பட்டுக்கோட்டை பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணி ஆய்வு

பட்டுக்கோட்டை, செப். 10: பட்டுக்கோட்டை வட்டாரத்துக்கு நடப்பு சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு 3,000 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளிடம் நேரடி நெல் விதைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் ஏக்கருக்கு ரூ.600 வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பட்டுக்கோட்டை வட்டாரத்தில் துரிதமாக தம்பிக்கோட்டை மற்றும் துவரங்குறிச்சி பிர்காவில் நடைபெறும் நேரடி நெல் விதைப்பு பணிகளை சென்னை சென்னை வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு செய்தார். தம்பிக்கோட்டை வடகாடு கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விவசாயி ஜெகநாதன் மற்றும் கிருஷ்ணாபுரம் விவசாயி குஞ்சான் ஆகியோரின் வயல்களை பார்வையிட்டார்.

Advertising
Advertising

பிறகு தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் விவசாயி சாம்பசிவத்தின் தென்னந்தோப்பில் கஜா வாழ்வாதார தொகுப்பு திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட்டது, நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 75 சதவீத மானியத்தில் தென்னைக்கு 1.2 இன்ட் 0.6 மீட்டர் இடைவெளியில் சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வு செய்தார். புதிதாக நடவு செய்யப்பட்டுள்ள தென்னங்கன்றுகள் வளரும் ஐந்தாண்டு காலம் வரை அதன் இடைவெளியில் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வேன் என்ற விவரத்தை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நெடுஞ்செழியன், வேளாண்மை துணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி மையம்) மதியரசன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் (பயிர் காப்பீடு) சுதா, (தரக்கட்டுப்பாடு) சாருமதி பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சங்கீதா, வேளாண்மை அலுவலர் சுதா மற்றும் உதவி விதை அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: