சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

சேலம், ஆக.22: சேலம் கொண்டலாம்பட்டி சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சாந்தா (58). இவர் நேற்றுமுன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஆசாமி திடீரென சாந்தா அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் சாந்தா புகார் அளித்தார். அதன்பேரில் பைக் ஆசாமியை தேடி வருகின்றனர். சமீப காலமாக சேலத்தில் நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறித்து செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: