இடைப்பாடி புதன்சந்தையில் 35 லட்சத்திற்கு காய்கறி விற்பனை

இடைப்பாடி, ஆக. 22: இடைப்பாடி புதன்சந்தையில், 90 டன் காய்கறிகள், 10 டன் பலாபழங்கள் என 35 லட்சத்திற்கு விற்பனையானது. இடைப்பாடி புதன்சந்தை நேற்று கூடியது. பல்வேறு பகுதியில் இருந்து 90 டன் காய்கறிகள், 100 ஆடுகள், சேவல் மற்றும் கோழி 1500, பலாப்பழம் 10 டன் என விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். தொடர் மழை பெய்து வருவதால், நேற்று சந்தையில் காய்கறிகளின் விலை குறைவாக காணப்பட்டது. ஒரு கிலோ கேரட் 30 முதல் 50க்கும், பீன்ஸ் 20முதல் 60க்கும், முட்டைகோஸ் 20 முதல் 25க்கும், முள்ளங்கி 10 முதல் 15க்கும், பெரிய வெங்காயம்  20 முதல் 35க்கும், 27 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி 550 முதல் 700 வரையும் மற்றும் சேவல் 250 முதல் 750 வரையும், கால்நடைகள் கயிறு சங்கு சலங்கை, மணி 10 முதல் 90 வரையும், பலாப்பழம் ₹50 முதல் 190 வரையும் ஆடுகள் 8700 முதல் 11000 ஆயிரம் வரை விற்பனையானது. இதில் 90 டன் காய்கறிகள், 10 டன் பலாப்பழங்கள் என மொத்தம் 35 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Advertising
Advertising

Related Stories: