அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

சேதுபாவாசத்திரம், ஆக. 20: சேதுபாவாசத்திரம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடச்சிக்காடு கிளை, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி சார்பில் ரத்ததான முகாம், அரசு கல்லூரியில் நடந்தது. டிஎன்டிஜே மாவட்ட செயலாளர் வல்லம் பாட்சா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். காவல்துறை உதவி ஆய்வாளர் அருள்குமார், ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு பங்கேற்று ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.

Advertising
Advertising

மாவட்ட துணை செயலாளர் ஆவணம் ரியாஸ், மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட மருத்துவரணி ஜியாவுதீன், கிளை தலைவர் ஹனிபா, செயலாளர் சாகுல் ஹமீது, பொருளாளர் சேட் இப்ராம்ஷா மற்றும் பலர் பங்கேற்றனர். முகாமில் 45 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: