தாரமங்கலத்திற்கு 27ம் தேதி வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு

தாரமங்கலம், ஆக.20: தாரமங்கலத்திற்கு வரும் 27ம் தேதி வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது என மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், மேற்கு மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரவிகுமார் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் சிவலிங்கம், பார்த்திபன் எம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், பொருளாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன், கந்தசாமி உள்ளிட்ட பலர் பேசினர்.

Advertising
Advertising

கூட்டத்தில், தாரமங்கலத்தில் வரும் 27ம் தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், விழாவில் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் கழக பொறுப்பாளர்கள், பேரூர் செயலாளர் குப்பு(எ) குணசேகரன், துணை செயலாளர் சீனிவாசன், ஆறுமுகம், சேகரன், சின்னப்பையன், முத்துசாமி, கருணாநிதி, சிலம்பரசன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரவிகுமார் நன்றி கூறினார்.

Related Stories: