கெங்கவல்லி அருகே மின்விளக்கு கம்பத்தை திருட முயன்ற 2 பேர் கைது

கெங்கவல்லி, ஆக.11:  கெங்கவல்லி அடுத்த 74.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் செந்தில்குமார்(23). அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் விக்னேஷ் (23). இருவரும் குடிப்பதற்கு பணம் இல்லாததால், கூடமலை ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கவல்லி-தம்மம்பட்டி நெடுஞ்சாலை கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பத்தை திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், இரண்டு வாலிபர்களையும் பிடித்து, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில், இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அரசுக்கு சொந்தமான மின்கம்பத்தை திருட முயன்றதாக, கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
Advertising
Advertising

Related Stories: