ஓடும் பஸ்சில் இருந்து விழுந்த கண்டக்டர் படுகாயம்

வேலூர்: ஓடும் பஸ்சில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கண்டக்டரை பயணிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பஸ் நேற்று முன்தினம் பயணிகளுடன் புறப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த கண்டக்டர் சதாசிவம் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பாகாயம் அடுத்த அ.கட்டுபுடி சாலை சந்திப்பு அருகே சென்றபோது சதாசிவம் திடீரென்று நிலைதடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார்.

Advertising
Advertising

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. பலத்த காயமடைந்த சதாசிவத்தை பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: