தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி விபத்தில் சிக்கிய பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் நிதியுதவி

சேதுபாவாசத்திரம், ஜூலை 23: சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அப்ராபாத்திமா (8), அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். ஏழ்மையான மாணவியின் மருத்துவ சிகிச்சைக்காக பல்வேறு தரப்பினரும் உதவி செய்த நிலையில் தற்போது சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் பள்ளி மாணவிக்கு சேதுபாவாசத்திரம் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 600 நிதி திரட்டி பட்டுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், மாணவியின் பெயரில் கணக்கு தொடங்கி நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்படடது. மாணவி உயர்கல்விக்காக கல்லூரி செல்லும் போது, வரும் 2029ம் ஆண்டில் முதிர்வு தொகையாக ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்து 282 கிடைக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பத்திரத்தை (பாண்ட்) வட்டாரக்கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, சகுந்தலா ஆகியோர் முன்னிலையில், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முத்தரசன் ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு நேரில சென்று வழங்கினர். ஆசிரியர்-மாணவர்கள் உறவு என்பது அனைத்தையும் விட மேலானது என இந்நிகழ்வு உறுதிப்படுத்தி உள்ளது.

Related Stories: