காரைக்காலில் மரக்கன்றுகள் நட கருவி தேவையா? மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் கலெக்டர் தகவல்

காரைக்கால், ஜூலை 19: காரைக்காலில் மரக்கன்றுகள் நட கருவி தேவைப்படுவோர் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என கலெக்டர் விக்ராந்த் ராஜா அறிவித்துள்ளார்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக நேற்று மரக்கன்றுகள் நட ஏதுவாக வாங்கப்பட்ட புதிய கருவியின் செய்முறை விளக்கம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் ஆதர்ஷ், கைலாசநாதர் கோயில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்தொடர்ந்து அம்மையார் கோயில் நந்தவனத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் விக்ராந்த் ராஜா கூறுகையில், மாவட்ட முழுவதும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள், வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு இக்கருவி தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என்றார்.

Related Stories: