தனியார் அமைப்பு சார்பில் ஓடை தூர்வாரும் பணி துவக்கம்

ஈரோடு, ஜூலை 18:   ஈரோடு மாவட்டத்தில் மழைநீரை சேகரிப்பது தொடர்பாக தனியார் அமைப்புகள் சார்பில் நீர்நிலைகள் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்தார்.  அதன்படி ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளி மற்றும் அறம் அறக்கட்டளை சார்பில் ஈரோடு திண்டல் அருகே தெற்குப்பள்ளம் ஓடையை தூர்வார முடிவு செய்யப்பட்டது.  இதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளி நிர்வாக இயக்குனர் சிவகுமார் தலைமை தாங்கினார். விழாவில் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் அசோக்குமார், விஜயா ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். தெற்குப்பள்ளம் ஓடையில் இருந்து தடுப்பணை வரை சுமார் ஒரு கி.மீ., தூரத்துக்கு தூர்வாரப்படுகிறது. மேலும், ஓடையில் மரம், செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால், அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படுகிறது. விழாவில் மாநகராட்சி இணை பொறியாளர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.மேசை, நாற்காலிகள் வழங்கல்‘‘ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 மற்றும் ரவுண்ட் டேபிள் இண்டியா’’ அமைப்பின் சார்பில் ஈரோடு குமலன் குட்டை பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான மேசை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை, ஈரோடு ரவுண்ட் டேபிள் ஏரியா-7 சேர்மன் அஸ்வின், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211 சேர்மன் பாலசுப்ரமணியம், ரவுண்ட் டேபிள் செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ரேவந்த், சிம்ஸ் மருத்துவமனை சுதாகர் மற்றும் இண்டியன் பப்ளிக் பள்ளி ஷிவ்குமார் ரவுண்ட் ஆகியோர் வழங்கினர்.

Advertising
Advertising

Related Stories: