மது விற்ற 4 பேர் கைது

ஈரோடு, ஜூலை 18:   நம்பியூர் அடுத்துள்ள ஊத்துப்பாளையம் பகுதியில் உள்ள முள் காட்டில் மது விற்பனை நடைபெறுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நம்பியூர் ராயர்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த முருகன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  கெடாரை மணியம்பாளையம் சாலையில் உள்ள குப்பிப்பாளையம் கிராமத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட ராயர்பாளையம் வேலுசாமி (55), சிவகிரி மாரப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் மது விற்பனையில் ஈடுபட்ட சிவகிரியை சேர்ந்த பாலா (30), கடத்தூர் புதுக்கொத்துக்காட்டில் கள் விற்பனை செய்த ராமசாமி (55) உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: