ஆசிரியர்கள் அச்சம் திருக்காட்டுப்பள்ளி அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 18: திருக்காட்டுப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. பூதலூர் வட்டார கல்வி அலுவலர் அருள்மொழிராஜகுமார் தலைமை வகித்தார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பலவேசமுத்து வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் லட்சுமிநாராயணன், தஞ்சை மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் துணைத்தலைவர் தங்க.திருஞானசம்பந்தம், அன்பு.சுப்பிரமணியன், பள்ளி பெற்றொர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன், சத்தியமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திருவையாறு முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி பேசுகையில், தமிழக அரசு கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அரசு பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றார்.பள்ளிக்கு நலதிட்ட உதவிகளாக 117 மரக்கன்று, ஒரு மடிகணினி, சிசிடிவி கேமரா, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் பேசுகையில், கர்மவீரர் காமராஜர் தமிழகத்தில் 12 ஆயிரம் பள்ளிகளை ஏற்படுத்தினார். மதிய உணவு திட்டத்தை ஏற்படுத்தினார். அவர் பிறந்த நாள் கல்வி திருநாளாக அறிவித்ததுபோல் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை காமராஜர் பெயரால் இந்தியா முழுவதும் செயல்படுத்த அறிவிக்க வேண்டும் என்றார். மேலும் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் கட்டித்தர உறுதியளித்தார். விழாவில் பனங்காட்டு படை கட்சி மாவட்ட பொறுப்பாளர் திராவிடமணி மற்றும் காமராஜர் நற்பணி அமைப்பு, ஹரிநாடார் நற்பணி மன்றத்தினர், பள்ளி சிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Related Stories: