மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை டிஐஜி பாலகிருஷ்ணன் தகவல்

க.பரமத்தி ஜூலை.18: கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என என க.பரமத்தி காவல் நிலைய நூற்றாண்டு விழாவில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் 18வது கிலோ மீட்டர் தொலைவில் க.பரமத்தி கடைவீதி உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் காவல் நிலையமானது கடந்த 1.1.1919ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 100 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.இதன் நூற்றாண்டு விழா காவல் நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.விழாவிற்கு க.பரமத்தி ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார். எஸ்பி பாண்டியராஜன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி அசோகன் ஆகியேர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன்,கலெக்டர் அன்பழகன் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தனர். பிறகு வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்ததுடன் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் பங்கேற்ற பொதுமக்களுக்கு மரகன்றுகளும் வழங்கப்பட்டது.இதில் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பேசியதாவது: க.பரமத்தி காவல் நிலையமானது கடந்த 1.1.1919ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 100 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. பழைய பதிவேடுகளை பார்க்கும் போது முந்தைய கால கட்டங்களில் குற்ற செயல்கள் குறைவாகவே உள்ளதை காண முடிந்தது. இதே போல குற்ற செயல்கள் தற்போது நாளுக்கு நாள் குறைந்து குற்ற செயல்களே இல்லை என கூறும் அளவிற்கு இருக்க வேண்டும். திருச்சி சரகத்தில் அந்தந்த காவல் நிலையங்கள் தொடங்கப்பட்ட நாளை அனைத்து காவல் நிலையங்களிலும் கொண்டாடப்படுவதுடன் பொதுமக்கள் போலீஸ் நல்லுறவு கூட்டமும் விழிப்புணர்வு கூட்டங்கள் விரைவில் நடத்தப்பட உள்ளது என்றார்.

Related Stories: