மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

காட்டுமன்னார்கோவில், ஜூலை 18: காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு கலைக்கல்லூரி பொறுப்பு முதல்வர் தென்னரசு தலைமை தாங்கினார். கல்லூரி பேராசிரியர்கள் சரவணன், ஜமுனாராணி, சிற்றரசு ஆகியோர் பேரணியை வழி நடத்தினர். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் துரைராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் சாந்தி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி  பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. பேரணி சேத்தியாத்தோப்பு அரசு உயர்நிலை பள்ளியில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அண்ணாமலைநகர் நகர் அஞ்சல் அலுவலகம் அருகில் புறப்பட்ட பேரணிக்கு அண்ணாமலைநகர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட்ரமணன் தலைமை வகித்தார். அரசு உதவி பெறும் பள்ளிகளான ராணி சீதை ஆச்சி பள்ளி மற்றும் மீனாட்சி துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர்கள், பேரூராட்சி ஊழியர்கள், சுயஉதவிக்குழுவினர், டெங்கு களப்பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து முழக்கங்களை எழுப்பி சென்றனர். பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார். சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஆரோக்கியசாமி, தின்னாயிரமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பண்ருட்டி டிஎஸ்பி நாகராசன் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

Related Stories: