அஸ்தம்பட்டியில் தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்

சேலம், ஜூலை 16:  சேலம் அஸ்தம்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் செல்வம் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட தலைவர் அன்பழகன், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் மாநில பொதுச்செயலாளர் குலோத்துங்கன், மாநில இணை செயலாளர் சின்னதுரை, மகளிரணி மாநில துணை தலைவர் சிந்தாமணியம்மாள், மத்திய மாவட்ட துணை தலைவர் சிவக்குமார், மத்திய மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேஷ், கார்த்திக், குமார், அஸ்தம்பட்டி மண்டல தலைவர் காசிராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: