கடலூர் பகுதியில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும்

கடலூர், ஜூலை 16: கடலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க கடலூர்-விழுப்புரம் மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது. கடலூர் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இணை செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ஜோதி வீரபாண்டியன் சிறப்புரையாற்றி பேரவை மலரை வெளியிட்டனர். கடலூர் சங்க செயலாளர் தேவராஜ், பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து வருகிறது. இதனால் கடலோர பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடலூரில் அதிகளவு ஏற்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கேற்றவாறு நீர்நிலைகளை தூர்வார வேண்டும். கடலூரை காத்திட நிலத்தடி நீரை பெருக்கிட பூமிக்கு அடியிலும் நீர் சேமிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். நிலத்தடி நீர் சேமிப்பு உள்ட்டவை தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வாரிய நீர்நிலை வல்லுனர்களின் மூலம் திட்டம் தயாரித்து தமிழக அரசுக்கு சமர்ப்பிக்க வழி காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தனபால் நன்றி கூறினார்.

Related Stories: