புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன்குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

புதுக்கோட்டை, ஜூலை 12: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) புதுக்கோட்டை தாலுகா புத்தாம்பூர், ஆலங்குடி தாலுகா முடுக்குவயல், திருமயம் தாலுகா அகவயல், குளத்தூர் தாலுகா வடுகப்பட்டி, இலுப்பூர் தாலுகா மாம்பட்டி, கந்தர்வகோட்டை தாலுகா நெப்புகை கிராமம், அறந்தாங்கி தாலுகா தர்மராஜன்வயல், ஆவுடையார்கோவில் தாலுகா தாளிக்காடு, மணமேல்குடி தாலுகா சிலாத்தனி, பொன்னமராவதி தாலுகா கொன்னையூர், கறம்பக்குடி தாலுகா மைலன்கோன்பட்டி, விராலிமலை தாலுகா மேபூதகுடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்கு உள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன்பெறலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: