மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி இல்லை

அரசு மற்றும் தனியார் பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இருக்கை ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், ஒரு வரிசையில் ஆண்களுக்கான இருக்கையும், ஒரு வரிசையில் பெண்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கட்டாயம். இதுதொடர்பாக இருக்கையின் அருகே எழுதியிருக்க வேண்டும். ஆனால், அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் கிடையாது. தனியார் பஸ்களிலும் இதுபோன்ற ஏற்பாடுகள் கிடையாது. மேலும் தனியார் பஸ்களில் அதிகளவில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இதனால், வயதானவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற அதிகப்படியான கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு கும்பல்கள் பஸ்களில் கைவரிசை காட்டும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே, அரசு பஸ்களை முறையாக பராமரிப்பதோடு, தனியார் பஸ்களில் விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: