கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் பூட்டியே கிடப்பதால் மக்கள் அவதி

கெங்கவல்லி, ஜூன் 27:  கெங்கவல்லி தாசில்தார் அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் பூட்டியே கிடப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.கெங்கவல்லி தாசில்தார் அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையத்தில் புதிதாக ஆதார் எடுப்பதற்கும், ஆதார் எடுத்தவர்களுக்கு திருத்தம் செய்வதற்கும் பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, சேவை மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் செல்லுகின்றனர். இதனால் ஆதார் அட்டை எடுக்க, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூருக்கு செல்ல ேவண்டிய சூழ்நிலை உள்ளது. இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது, கெங்கவல்லி ஆதார் சேவை மையம் பணிபுரிந்த ராமமூர்த்தி என்பவரின், ஐடி நம்பர் பிளாக் செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் பணிக்கு வருவதில்லை என்றார். எனவே மாவட்ட நிர்வாகத்தினர் கெங்கவல்லி ஆதார் சேவை மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: